Tuesday, January 11, 2011

கருமுத்து தி.கண்ணன் கவிதை

கருமுத்து மகனாக அவதரித்த கண்ணா !
நன்முத்து போல இங்கு ஒளிவீசும் மன்னா !
சிறு வயது முதலாய் தருமங்கள் புரிந்தாய்!
பெரியவர் நல்லாசி பெருகிடவே வளர்ந்தாய் !
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அறங்காவலர் குழுத் தலைவராய் அருஞ்
செயல் புரிகின்ற சிவநேசச்செல்வா,
தொழிலாளர் நலம் காக்க பல கோடி தந்தாய்
பஞ்செலாம் உணர்ந்து நூற்பதில் வல்லவன்
உழைப்பின் அருமை உணர்ந்தவரே !
உழைப்போர்க்கு பெருமை தந்தவரே!

Monday, January 10, 2011

கருமுத்து தியாகராசர்

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.

Sunday, January 9, 2011

கீ .ஆ.பே. விசுவநாதம்

வாழ்த்தக் கேட்பின் தாழ்த்திக்கொள் என்பது கி.ஆ.பெ. வின் பொன்மொழி.
பிறர் கலைத்தந்தையை வாழ்த்தினால் ஆரவாரமில்லாமல் அடக்கமாகவே இருப்பார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற படி தொழில்மேதை ஜி.டி. நாயுடு அவர்களைப்போல் கடும் உழைப்பில் நம்பிக்கை கொண்டு உழைப்பால் உயர்ந்தார். தெய்வபக்தி மறைந்தாலும் குறைந்தாலும் நாடு சிறக்காது எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது. தெய்வபக்தி இல்லாத மக்கள் விலங்குக்கு நிகராவார். போலி பக்தியினால் தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற ஹிடமான எண்ணத்துடன் தூய சமய உணர்வுடன் வாழ்ந்தார் நமது கலைத்தந்தை.

கருமுத்து தியாகராசர்

பெரும் செல்வராக இருந்த போதிலும் அவரிடம் பணிவு என்றும் நிலைத்து இருந்தது. பெருக்கத்ஹு வேண்டும் பணிவு என்ற வள்ளுவப்பெருந்தகையின் கொள்கையை இறுதிவரை லட்சியமாக கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் காந்தியிடனும் காங்கிரஸ் இயக்கத்திலும் தொடர்பு கொண்டு பணிபுரிந்தார். காந்தியவர்கள் கருமுத்து இல்லத்தில் அரை ஆடை அணிந்தார்கள். அவர் அன்றும் பிறகும் விரும்பியிருந்தால் வளைந்து கொடுத்து இருந்தால் பல பதவிகள் அவரைச்சரண் அடைந்திருக்கும். காலத்திற்கு ஏற்றவாறு நீதியை கொள்ளுதலும் தள்ளுதளும்செய்தல் வேண்டும் என்ற பண்டித மணியின் வாக்கினை ஏற்று அதன் படி வாழ்ந்தார்.

சோ.இராசாசண்முகம்..........

இளைஞர்களின் ஆர்வத்தை வளர்த்ததுடன் தமிழ் ஆய்ந்தோரின் ஆராய்ச்சியை தெளிந்து அறிந்து தமிழ் வளர்த்தார். சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்க அயராது உழைத்தவர். நல்ல தமிழுக்கு நவசக்தி தமிழ்ப்பெரியார் திரு.வி.க. நடத்திய பத்திரிகை என்பார்கள் முன்னோர்கள். அதே போன்று தமிழ்நாடு நாளிதழ் மூலம் நல்ல தமிழில் செய்தித்தாளை நடத்திக்காட்ட முடியும் என்று நிரூபித்தவர் கலைத்தந்தை. அவர் இலங்கையில் தொழிலாளர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கட்கு வேலை வாய்ப்பினை தந்து தொழிலை எழில் பெறச்செய்தார்.

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.

மறக்க முடியாத மாமனிதர் - சோஇராசாசன்முகம் .

வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும்இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பல பல பள்ளி. என்ற பாரதியின் மணிமொழிக்கேற்ப கல்விசெல்வத்தை பாகுபாடு இல்லாமல் பலருக்கும் வாரி வழங்கிய வள்ளலான கலைத்தந்தந்தையின் பிரிவு வேதனைக்கு உரியது.
நாவலர் சோமசுந்தர பாரதி , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பே.விசுவநாதம் , தமிழ்க்கடல் ராய.சொபண்டிதமணி, திருவாசகமணி மறைமலையடிகள் சித்தாந்த கலாநிதி அவ்வை சு. துரைச்சாமி பிள்ளை அறநெறி அண்ணல் சொ.முருகப்பா போன்ற பல சான்றோரை நண்பர்களாகப் பெற்ற கலைத்தந்தை தமிழ்ப்பணி தளராமல் இருக்க இடையறாது ஊக்கம் அளித்தார்..

Saturday, January 8, 2011

கலைத்தந்தை-சோ. இராசா சண்முகம்

நாயினும் கீழாய் செந்தமிழ் நாட்டார் நலிவதை ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி யான் கண்டு உழைத்திட நான் தவறேன். என்ற பாரதிதாசன் மனிமொழிக் கேற்ப தமிழ் மொழி தமிழ்மக்கள் தமிழ்நாடு என்று அவற்றின் உயர்வுக்கு வழி கோல அயர்வில்லாமல் தமிழ்நாடு பத்திரிகை நடத்தினார். காரணம் அவர் நோக்கும் போக்கும் எழுத்தும் சொல்லும் தமிழின் வளர்ச்சி என்ற முல்லைக்கொடியினை த்தழுவி இருந்தது. தமிழ்நாடு ஞாயிறு மலர் ஒவ்வொரு இதழும் செங்கரும்பு தித்திக்கும் தேன்கூடு தெவிட்டாத முக்கனிச்சாறுவண்ணப் பூந்தோட்டம் வாசமலர்க்கூட்டம். வற்றாத ஜீவநதி. செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலின் மூச்சினை உனக்கு அளித்தேனே என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கண்ட உயர் லட்சியத்துக்கு உதாரணமாக கடைசி வரை தமிழ் ப பணியினை த தொடர்ந்த கலைத்தந்தையை எளிதில் மறக்க முடியுமா. ......

சோ. இராசா சண்முகம்

கடுஞ்சொல் அறியார் காட்சிக்கு எளியர் என்பது வெறும் புகழுரை அல்ல. வாழ்வில் நாம் கண்ட மறுக்கமுடியாத உண்மையாகத் திகழ்ந்தவர். காலா என் காலருகே வாடா என்று யமனுக்கு அறைகூவல் விடுத்து பாரதி சொன்னது போல தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் துன்பங்கள் அணிவகுத்து சூழ்ந்த போதும் துணிவுடன் வாழ்ந்த வீரர் அவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று கற்றதோடு விட்டு விடாமல் கடைப்பிடித்து லட்சிய வாழ்க்கைப்பாதை அமைத்துக்கொண்டார். புகழை நாடி அவர் ஓடியது இல்லை. புகழ் அவரைத் தேடி குவிந்தது. எனவே இயற்கையான நிலைத்த புகழுக்கு உரியவர் ஆனார்.

கலைத்தந்தை-இயக்குனர் சுப. முத்துராமனின் மைத்துனர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழ்ந்த கலைக்குரிசிலுக்கு உலகம் சொந்தமாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. காரணம் கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமையுடைத்திவ் வுலகு என்றார் வள்ளுவப்பெருந்தகை.கலைத்தந்தை போற்ற வேண்டியவர்களை அவர்தம் வாழவில் போற்ற தவறியது இல்லை. போற்ற கூடாத வர்களைக் கண்டு ஒதுங்கியது உண்டு. ஏனெனில் செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்ற குறளின் படி செய்ய வேண்டியவைகளை ச செய்யத் தவறியது இல்லை. செய்யக்கூடாதவைகளை செய்ததும் இல்லை என்பதை மிக அருமையாக உணர்ந்து தெளிந்ததே அவர் பெருமைக்கு காரணம்.

கலைத்தந்தை - சோ.இராசாசண்முகம்

தொழிலே வாழி நீ , தொழிலே வாழி நீ எழிலை உலகம் தழுவும் வண்ணம என்றார்
பாவேந்தர் பாரதி தாசன் . ஆலைகளுக்கும் கல்விசாலை களுக்கும் அழகு சேர்த்தவர் கலைத்தந்தை அவர்கள். செய்யும் தொழிலே தெய்வம் திறமை தான் நமக்கு செல்வம் என்றவாறு தம் வாழ்வின் கடைசி மூச்சு வரை எண்ணமும் வாழ்வும் ஒன்றியபடிவாழ்ந்தார் கலைத்தந்தை .அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியரசு ஆணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம். என்ற பாரதியின் கூற்றுக்கு நாம் வாழ்வில் கண்ட மாமனிதரே நல்லதோர் எடுத்துக்காட்டு . வீடுகளின் கூட்டம் நாடு நாடுகளின் தொகுதி உலகம் . உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பழந்தமிழ் இலக்கியம் . .