Thursday, April 28, 2011

message sent to District collecter Madurai through Dinamalar.com from sharjah

பெருமதிப்பிற்குரிய மாவட்ட் ஆட்சியாளர் அவர்கட்கு தங்களது செயல்பாடுகள் பாராட்டத் தக்கவை. மதுரை மேலமாசி வீதியில் 251 கதவு எண்ணில் ஒரு கதர்க்கடை உள்ளது. தமிழ்நாடு அரசு விழா ஒன்றினை நடத்தியது. மகாத்மா காந்திஜி அவர்கள் மதுரைக்கு 22.9.1921ல் வருகைதந்த பொழுது இக்கட்டிடம் மீனாட்சி ஆலையின் கருமுத்து தியாகராசரின்அலுவலமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடத்தில் தான் தேசத்தந்தை அரைஆடை அணிந்தார்கள். தினமலர் மதுரைமாவட்டமலர் 23.7.2008 & 30.7.2008 செய்தி புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. செய்தியைப் பார்த்த பின்னர்பொதும‌க்க‌ளில் ஒருவ‌னாக‌ அங்கு சென்றேன். எங்க‌ளை அங்குள்ள‌ மாடிக்குஅனும‌திக்க‌வில்லை. ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் செல‌வ‌ழித்து தேச‌த்த‌ந்தையைப் பூட்டி வைத்துள்ளார்க‌ள். பிர‌தி வ‌ருட‌ம் அக்டோப‌ர் மாத‌ம் 2 ஆம் தேதி ம‌ட்டும க‌த‌ர்த்துறை அதிகாரிக‌ளுக்கான‌ வ‌ருகைக்காக‌ தேச‌த்த‌ந்தை காத்து உள்ள‌ நிலைமை. உங்க‌ள் வீட்டில் உங்கள் த‌ந்தையை இப்ப‌டிப் பூட்டி வைப்பீர்களா என‌க்கேட்கத் தான் என்னால் முடிந்தது. ஆவன செய்ய வேண்டுகின்றேன்.இங்கு பர்துபாயில் ஒருமியூஸியம் உள்ளது. அங்கு கட்டிட தொழிலாளர்கள்,மீனவர்கள்,தையற்கலைஞர்கட்கு சிலைகள் வைத்து உள்ளனர் என்றால் தேசத்தந்தைக்கு சொல்லவா வேண்டும். பஞ்சாலைக்கவிஞர்ச.இள்முருகன்பஞ்சாலை.ப்ளாக் ஸ்பாட்.காம்.

Wednesday, April 6, 2011

Tamilnaduchiefminister Doctor.kalaignarM.Karunanithiabout karumuttu thiagarajan chettiar

கலைத்தந்தை பற்றி டாக்டர் கலைஞர் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள். தமிழகத்தில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வள்ளல் தன்மையோடு வாழ்ந்தவர். தமிழ் மொழியின் செழிப்பிலும் வளர்ச்சியிலும் அன்னார் காட்டிய பற்றும் ஆர்வமும் பாராட்டத்தகுந்தவையாகும் .தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டொர் வரிசையில் மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபட்ட சீரிய செம்மல்களின் வரிசையிலும் திரு. கருமுத்து தியாகராசனார்அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். கலையன்னைதிருமதி இராதா தியாகராசன் பற்றி பஞ்சாலைக்கவிஞர் ச.இளமுருகன்.தமிழ் பயில எளிமையான மொழி. திருமணத்திற்குப்பிறகு கணவர்சொற்படி அவ்வைசு. துரைசாமிப்பிள்ளை அவர்களிடம் தமிழைக்கற்று அண்ணாமலைப்பல்கலைக்கழகத் துணை வேந்தரானகலையன்னை திருமதி இராதாதியாகராசன் அவ்ர்கள் உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுக்கு முன்னுதாரணம்.வாழும் வாசுகி திருவள்ளுவர்.

Tuesday, April 5, 2011

M.SENTHILKUMAR KOVAI

செந்தில்குமார்.கோவை எழுதிய பாடல்கள்.

உன்னை ஈந்தார்க்கு ஈந்து மகிழ்க‌
மன்னும் புகழை மட்டும்.
உம்பொருளெம்பொருள் உரிதில்லை அனைத்தும்
உரித்தாமே மேல் நின் ரோற்கு.
என்னுடமைஉன்னுட்மை என்றான போது
அன்றுணர்ந்தேன் பாசத்தை.
வான்சொல் வழஙகாத மாற்றம் இன்சொல்
வழங்கும் உயிர்மாயும்வரை.
மனதடக்கும் வேளை மடையுடைக்கும்
புனலான எண்ணமே உணர்ச்சி.
துரோகத்துள்துரோகம் நம்பிக்கைதுரோகம் அத்துரோகம்
துரோகத்துள் எல்லாம் தலை.