Wednesday, August 18, 2010

கருமுத்து thiagarajar

த்மிழன் தமிழனாக வாழவேண்டும். அவன் பிற மொழி கலவாமல் பேச‌
வேண்டும்.
அவனை அழைத்து வந்து மொழியறிவு ஊட்டிவிட்டு பேசடா என்று பேசு என்று பேச வைத்துப் பார்த்திருப்பேன். பஞ்சாலைக்கவிஞர்.
தந்தை பெரியாரும்,மூதறிஞர் இராஜகோபாலச்சாரியாரும், அண்ணல் காந்தியாரும்,இராமாநுஜரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உரிமை கேட்டு
போராடத் தேர்ந்தெடுத்த இடம் கோயில்கள் தானே! பஞசாலைக்கவிஞர்.
மலையாள மொழியைத்தாய்மொழியாகக்கொண்ட திருமதி இராதா தியாகராசன்
அவர்கள் திருமணத்திற்குப் பிறகு தமிழ்ப்பற்றாளர் கருமுத்து தியாகராசர்
சொற்படி ஓளவை துரைசாமிப் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்று திருவாசக ஆய்வுக்கட்டுரை எழுதி முனைவர் பட்டம் பெற்று அழகப்பா பல்கலைக்
கழக துணைவேந்தரானார். தமிழ் மொழி பயில எளிமையானது
என்பதனைஉலகிற்கு எடுத்துக்காட்ட இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றேன்.
பஞ்சாலைக்கவிஞர்.த‌மிழ‌ன் என்றொரு இன‌முண்டு த‌னியே அவ‌ர்க்கு ஒரு குண‌முண்டு. தாய்மொழிப்ப‌ற்று த‌மிழ‌னிட‌ம் அள‌வுக்கு அதிக‌மாக‌ உண்டு என்ப‌த‌னை ந்ன்கு முத‌ன்முத‌லாக‌ எடைபோட்டு த‌ன‌து அர‌சிய‌லில் மொழியினைக் க‌ருவியாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தி திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தினை ஆளும் க‌ட்சியாக‌ மாற்றிய‌வ‌ர் பேர‌றிஞ‌ர் அண்ணாத்துரை அவ‌ர்க‌ள். தொழில் அதிப‌ர்க‌ளுள் க‌ருமுத்து தியாக‌ராச‌ர் ஒருவ‌ரே த‌மிழ்க்கொடி ஏற்றிய‌வ‌ர் ப‌ஞசாலைக்க‌விஞ‌ர்.
ஆலை அரசரின் சமயத்தொண்டு
ஆலை அரசரின் சமயத்தொண்டு பேராசிரியர் சி.எஸ்.சூரியமூர்த்தி
அமெரிக்க‌ ம‌கா க‌விஞ‌ர் H.W.லாங்பெல்லோ ஒரு பிர‌ப‌ல‌மான‌ க‌விதையில் சான்றோர்க‌ள‌து வாழ்வு ந‌ம்மைப்ப‌ண்ப‌டுத்தும் வ‌ழிகாட்டியாகும் என்ப‌தை
"lives of Great men all remind us we can make our lives sublime"

என்று அழ‌காக‌வும் அழுத்த‌மாக‌வும் கூறியுல்லார். இம்ம‌துரையில் த‌ம் திட‌மான‌ தெய்வ‌ந‌ம்பிக்கையாலும், அய‌ர்ர‌த‌ உழைப்பாலும், வ‌ற்றாத‌ கொடைத்
த‌ன்மையாலும் உய‌ர்ந்த‌ மாம‌னித‌ர் க‌லைத்த‌ந்தை. ஆலை அர‌ச‌ர் க‌ருமுத்து தியாக‌ராச‌ர் வாழ்விலொளிர்ந்த‌ ப‌ண்புக‌ள் ப‌ல‌. அவ‌ற்றில் ஆணிமுத்தாக‌ மிளிரும் அன்னார‌து ச‌ம‌யககொட்பாடுக‌ளையும் அவ‌ற்றைச் சார்ந்து அவ‌ர்க‌ள் ஆற்றிய‌ தொண்டினையும் ஆலை அர‌ச‌ர் க‌ருமுத்து தியாக‌ராச‌ர் என்ற நூல் வ‌ழி சார்ந்து ந‌ம‌க்கெல்லாம் வாழ்விய‌ல் வ‌ழிகாட்டி விருந்தாக‌ அளிக்க‌ உள்ளேன். சமயமும் தொழிலும். ஆலை அரசர் அவர்கள் சமயத்தையும் தொழிலையும் இருகண்களாகவும் நாணயத்தின் இரு பக்கங்களாகவும் கருதினார்கள். தம் வழ்க்கையில் பெற்ற வெற்றிகளுக்கும் உயர்வுகளுக்கும் மூலகாரணம். இறைவனே என்பது
கலைத்தந்தையின் உள்ளத்தில் நின்ற நம்பிக்கை ஆகும். அவனன்றி ஓர்
அணுவும் அசையாது என அடிக்கடி உளம் நெகிழக் கூறுவார்களாம். அதனால் வாழ்க்கையில் வெற்றியையும் தோல்வியையும் ச‌ம‌மாக‌க் காணும் ஓடும் செம்பொன்னும் ஒக்க‌ நோக்கும் ப‌க்குவ‌ நிலையை அடைந்தார்க‌ள். தேறும் வ‌கை நீ திகைப்புல‌ம் நீ தீமை ந‌ன்மை முழுதும் நீ என்ற‌ திருவாச‌க‌த்தொட‌ரை அடீக‌டி கூறுவார்க‌ளாம். இந்த‌ ச‌ம‌ய‌ உழைப்பு இருந்த‌தால் க‌லைத்த‌ந்தை தொழிலில் ஏற்ப‌ட்ட‌ ப‌ல‌வ‌கைத்துன்ப‌ங்க‌ளையும் சோத‌னைக‌ளையும் வென்று அமைதியாக‌ இருக்கும் செம்மாந்த‌ நிலை பெற்றார். க‌லைத்த‌ந்தை ஒரு ச‌ம‌ய‌ ஆசிரிய‌ரோ, ஆச்சாரியாரோ இல்லை. ஆனால் ச‌ம‌ய‌ உண‌ர்வை தொழிலிய‌லின் அடித்த‌ள‌மாக‌ அமைத்துக்கொண்டார். நேர்மையான‌ பொருளீட்டாலும், தொழிலாள‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளைப்பேணுத‌லும் இந்த‌ உண‌ர்வால் வெளிப்ப‌ட்ட‌ன‌. செய்யும் தொழிலையே தெய்வமாக‌க் கொண்ட‌ பார‌தீய‌ ச‌ம‌ய‌வாதியாக‌க் க‌லைத்த‌ந்தை வாழ்ந்தார்க‌ள்.
கோவில் திருப்பணிகள். கலைத்தந்தையாரின் குலபெயரான செட்டி என்ற சொல் முருகனையும் குறிப்பதால், அவர்கள் சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்தார்கள். ஆலை அரசர் தம் சகோதரர்களுடன் இணைந்து சிக்கல் சிங்காரவேலன் கோயிலுக்கு பெரும் பொருட்செலவில் சிறப்பான திருப்பணிகள் செய்தார்கள். அக்கோவிலின் பாரம்பரிய அறங்காவலராகவும் தொண்டு செய்தார்கள். தங்கள் குலக்கோயிலாம்
மாத்தூர் கோயிலிற்குத் தங்கள் பாரம்பரிய மரபுப்படி பலரிடம் பணவசூல் செய்து திருப்பணி செய்து பலருக்கும் அந்தப்புண்ணியம் கிடைக்க வழி வகுத்தார்கள். மேலும் மத்ரை பழங்காநத்தம் மக்கள் வழிபட்ட ராவுத்தராயர் சுவாமி கோவிலுக்குத்தம் ஆலை நிலத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தார்கள். சைவ சமயப்பற்று. தமக்கு இறைவன் இயல்பாகக் காட்டிய வழியான சைவ சித்தாந்தசமயத்தைப் பெரிதும் போற்றி ஈடுபட்டார்கள். அவர்களின் வாக்குப்படி சைவ சமயம் உலகச் சமயங்களில் மிக்க பழமையும் சிறப்பும் வாய்ந்தது. அறிவியல் ஆராய்ச்சிக்கு அசைவின்றி ந்ற்கும் ஆற்றல் மிக்கது. எச்சமயத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் இயல்பும் எற்றமும் உடையது என்பதாகும். மனம் கரைத்து மலம் கெடுக்கும் திருவாசக நூலைதம் வழிபாட்டு நூலாகக் கொண்டார்கள். நூல் பூராவும் அவர்களுக்கு மனப்பாடமாம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்படி திருவாசகத்தை அவர்கள் காலையில் தினமும் ஓதும் முறையையே வழிபாடாகக்கொன்டார்கள். அறிஞர்களைக்கண்டபோதெல்லம் ந்வில்தொறும் நூல் நயம் போல அதன் பெருமைகளைக் கலந்துரையாடல் செய்வார்களாம். இந்நூலின் ஆழமான ஈடுபாட்டினால் தம் திருமகனார் ஒருவுருக்கு மாணிக்கவாசகம் என்றே திருப்பெயர் இட்டார்கள். கண்ணப்ப‌ நாயனாரின் அன்பு வழிபாட்டை மிகப்போஓற்றியவர்களாம். அதன் தாக்கத்தால் தன் கடைசித் தவபுதல்வருக்குக் கண்ணன் என்ற பெயர் அமைத்தார்கள். நோன்பின் பெருமையை மிக உணர்ந்தவர்கள் கலைத்தந்தை செல்வர்க்கே நோன்பு மிக அவசியம் என்பதை வள்ளூவர், இலர் பலராகிய கார‌ணம் நோற்பார் சிலர் நோவாதவர் என்று சிறப்பாகக் காட்டியுள்ளார்கள். ஆலை அரசர் அவர்கள் வழ்நாள் முழுதும் சோமவார திங்கள் கிழமை உண்ணாநோன்பை மேற்கொண்டார்கள்."One should die gracefullய்" என்று ஒரு மகாகவிஞன் குறிப்பிட்டார். கலைத்தந்தை அவர்கள் சமய உணர்விலேயே ஆழ்ந்து இருந்ததால் தூய வாழ்வு வாழ்ந்ததால், அவர்கள் திருவாசகத்தைபாடிக்கொண்டே எவ்வாதனையும் இன்றிப் பரந்தாமன் பாதம் பணிந்தார்கள் என நூலாசிரியரும் கலைத்தந்தையின் வாழ்க்கைத் துணைவியுமான முனைவர் திருமதி இராதா தியாகராசன் குறிப்பிட்டிருப்பது நம்மையே புல்லரிக்கச் செய்கின்றது. ஆலைஅரசர் பற்றிய நுலிலும் திருவாசகச் சொற்களைப் பொருத்தமான இடங்களில்
எல்லாம் அமைந்திருப்பது கலைதந்தையின் புகழுக்கு மேலும்மெருகு ஊட்டுவதாகா அமைந்துள்ளதுசமயப்பொறையுடைமை.
ஆலை அர‌ச‌ர் அவ‌ர்க‌ள் சைவ‌ ச‌ம‌ய‌ப்ப‌ற்றுடைய‌வ‌ராக‌ இருந்தாலும், வேற்று ச‌ம‌ய‌ங்க‌ளை மிக‌வும் ம‌தித்தார்க‌ள். unity in diversity" என்ற‌ கொள்கைக்கேற்ப‌ வேற்றுமையில் ஒற்றுமை க‌ண்டார்க‌ள். அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் நிகழ்த்திய பட்டமளிப்பு விழாவில் கீழ்க்கண்டவாறு தம் கருத்துகளை 1960 ல் வெளியிட்டார்கள். continuance of individual religious practices, of prayers and meditations moral instruction of a general nature should find a place in our schools and colleges and also in our universities. It should not be difficult for seperate religious practices of the different faiths of our land to be permitted in the cosmopolitan atmosphere of our centres of learning. இந்த‌க் கொள்கைக்கேற்ப‌ தியாக‌ராச‌ர் க‌லைக‌ல்லூரியில் எல்லா ச‌ம‌ய‌த்த‌வ‌ரும் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌ வான்னாகி ம‌ண்ணாகி என்று தொட‌ங்கும் திருவாச‌க‌ப் பாட‌லைத்தின‌மும் பாடிக் க‌ல்லூரிப்ப‌ணியைத்தொட‌ங்கும் முறையை அமைத்துள்ளார்க‌ள். சைவ‌ உண‌வு. ஆலை அர‌ச‌ர் அவ‌ர்க‌ள் வ‌ள்ளுவ‌ர் வ‌குத்த‌ புலால் ம‌றுத்த‌லை த‌லைய‌ய‌ அற‌மாக‌க் கொண்டார்க‌ள். அன்பின் தொட‌க்க‌மே கொல்லாமை என்ற‌ கொள்கையுடைய‌ வ‌ர்க‌ள். தாம் நிறுவிய‌ க‌ல்லூரிக‌ளில் சைவ‌ உண‌வையே ச‌மைக்க‌ ஆணையிட்டார்க‌ள். தம் ஊரைச் சார்ந்த கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் பல காலம் நடந்த
உயிர்ப்பலிமுறையை அவர்கள் எடுத்துக்கூறி நிப்பாட்டும் தொண்டாற்றினார்கள்.
அன்பே இறைவன் என்று நம்பியதால் அவன் படைப்பாகிய எந்த உயிரையும் வ‌தைத்த‌ல் கூடாது என்ப‌து ஆலைஅர‌ச‌ரின் சால‌க்கொள்கை. வேற்று ச‌ம‌ய‌த்த‌வ‌ரையும் போற்றுத‌ல். ஒன்றே குல‌மும் ஒருவ‌னே தேவ‌னும். என்ற‌ திருமூல‌ர் வாக்கைத் த‌ம் ச‌ம‌ய‌ உண‌ர்வாக‌க் கொண்டார். தொழில்துறையில் ப‌ணிக்கு ஊழிய‌ர்க‌ளைத் தேர்வு செய்யும் போது திற‌மை நேர்மை இர‌ண்டை ம‌ட்டுமே அள‌வுகோலாக‌க் கொண்டார்க‌ள். கோடைகான‌ல் செல்லும் பொழுது எல்லாம் அங்குள்ள‌ கிறுத்துவ‌ பாதிரியார்க‌ளைச் ச‌ந்தித்துப் ப‌ய‌னுள்ள‌ க‌ருத்த்க்க‌ளை ப‌ரிமாற்ற‌ம் செய்வார்க‌ள். வ‌ண்ண‌ங்க‌ள் ப‌ல‌ சித்திர‌ங்க‌ளை அழ‌கூட்டுவ‌தைப்போல‌ ச‌ம‌ய‌ங்க‌ள் ப‌ல‌வும் தெளிவு கிடைக்க‌ உத‌வும் என்று ஆழ‌மாக‌ ந‌ம்பினார்க‌ள். திராவிட‌ நாக‌ரிக‌ம் ப‌ற்றிச் சிற‌ப்பான‌ ஆய்வு செய்த‌ ஹீராய் பாதிரியார் உட‌ல்ந‌ல‌ம் குன்றி வ‌ருந்துவ‌தை அறிந்து த‌ம் செல‌வில்அவருக்கு சிறப்பான வைத்தியம் செய்து சிறிது நலம் அடைந்தவுடன் அவர் தய் நாடான ஸ்பெயினுக்கு மதுரையில் இருந்து செல்ல பொருள் உதவி அவரை போற்றினார்கள். பிற சமயங்களில் உள்ள கொள்கைகளை தம் சமயமான சைவ சமயம் உர‌ம் பெற பாங்காக எடுத்துகொண்டார்கள்.மனித நேய சமய உணர்வோடு அவர்கள் வாழ்ந்தார்கள். அது நம‌க்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும் . ஆலை அரசரைப் பாடிய புலவரும் சித்தத்துள் சிவத்தை வைத்தார் என்றும் விருப்பினைத்தொண்டில் வைத்தார் என்றும் போற்றினார்கள்.
தலையாலே தான் தருதலால் இராமாநுசக் கள்ளபிரான், அறங்காவலர் நம்மாழ்வார் சபா 80. வ.உ.சி.தெரு--195.229.237.42 07:49, 18 ஆகஸ்ட் 2010 (UTC)திருநெல்வேலி 627003. முன்னாள் பாண்டியன் கிராம வங்கி தலைவர் தியாகராசர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக தன் பணியினைத்தொடங்கி வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை நூலினை வானதிப்பதிப்பகம் மூலம் வெளியிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசினை பெற்றவர். 19.8.2010 அவரது பேத்தி ஹரிணியின் திருமணம் திரு சிவாவுடன் நடைபெற உள்ளது. மணமக்களை வாழ்த்தி வெளியிடுகின்றேன்.இதுவரை நாங்கள் கலந்து கொண்ட திருமணங்களில் கலைத்தந்தை தொகுப்பு நூலினை வெளியிடுவது பழக்கம். இப்பொழுது வலைப்பதிவு மூலம் வெளியிடுகின்றேன். பஞ்சாலைக் கவிஞர் ச. இளமுருகன்,, ஷார்ஜா 15.8.2010
" அவர் கையாலே வாங்குவதற்கே கொடுத்து வைத்திருக்கவேண்டும் " என்று
பலர் சொல்வதைக்கேட்டிருக்கிறோம். " அவர் கால் ஒருமுறை இங்கே படவேண்டும் " என்று பலர் விரும்புவதைக் கேட்டிருக்கிறோம்.
"கால் ப‌ட்டு எழுந்த‌ காரிகை க‌தையும்", "கால் ப‌ட்ட‌ழிந்த‌" த‌லைமேல் அய‌ன் கையெழுத்தும் காதார‌க்கேட்டிருக்கிறோம். க‌ண் ப‌ட்டு பூத்த‌ காத‌லும் க‌ண்ப‌ட்டு பூத்த‌ காத‌லும் க‌ண்ப‌ட்டு காய்ந்த‌ நோத‌லும் அன்றாட‌ம் கேள்விப‌ட்டிருக்கிறோம்.
அவர்களுக்கு இடம் இங்கே கொடுத்திருக்கிறேன் என்று மனம் விட்டு சொன்ன மாமேதைகள் பற்றி நாமறிவோம். தானுண்ட நீரைத்தலையாலே தான் தரும் தெங்கு போல நன்றியுணர்வோடு நாளும் தமக்கு நலஞ்செய்தாரை மறவாது போற்றும் நல்லுள்ளங்கள் பற்றியும் உணர்வோம். அவைதான் இந்த சமுதாயத்தை தங்கும் ஆயிரங்கால் மண்டபத்து தூண்கள். அவர்களி ஒருவர் தான் பஞசாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கள்.
அதுவும் போற்றப்படுவர், சமுதாயத்திற்கு பல வகைகளில் சேவையாற்றியுள்ள பெரும் பண்பாளர் என்றறியும் போது, அவர்தம் பங்களிப்பு இந்த காலத்து இளைஞர்களுக்கு ஓர் இலட்சியமாகவும்,மற்றவர்களுக்கு நன்றியுணர்வோடு நினைவு கொள்ளும் ஒரு மாமருந்தாகவும் தகழும் என்றால் அவர் சேவையைப் பாராட்ட வார்த்தை ஏது?
காந்தியார் மனமாற்றக் களமாகக் கருத்தில் நின்று, கல்லூரிகள் பல தோற்றுவித்து கல்விக்கண்ணளித்து காரியம் ஆற்றிடும் வித்தை கற்பிக்கும் வகையான நூற்பாலைகள் பல நிறுவி தமிழ்நாடு தன்னைத் தோற்றுவித்து பேணி ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் தம் கருத்தில் நிறுத்தி போற்றவேண்டிய கருமுத்து தியாகராசனார் நினைவைபோற்றும் இப்பதிவு அன்னரின் பல்முகத்திறமைகளையும் அவர்கள் ஆற்றியுள்ள சேவைகளையும் வெளிக்கொணர்வதாய் அமைந்துள்ளது. அவர்கள் தம் ஆக்கப்பூர்வமான பணிகளை நாம் ஒவ்வொருவரும் போற்றிப்பாராட்டுவது நமது கடமையும் உரிமையுமாகும். கட்டிடககலையென்ன, கட்டிதமிழ் என்ன, கட்டிகாத்திட்ட வங்கி என்ன,கட்டிளங்
காளையர்க்குகல்லூரிகள், கட்டும் ஆடை தரும் நூற்பாலைகள், கட்சிப்பணி எல்லாம் அவர்தம் சேவைகளுக்கு கட்டியம் கூறும். இன்னும் நாட்டில் நிலவும் அவலங்களைக் களைவதற்கு அவர் சொல்லும் சட்டத்தை எளிமைப்படுத்துதல் ஒன்றே வழி. அரசியல்வாதிகளிடம் போய் அளவிற்கு மேல் குவிந்து விட்ட கட்டுப்பாடு, கண்காணிப்பு இல்லாத அதிகாரங்களை நெறிப்படுத்தி, அவர்தம் செயல்களை க் கணித்து ஆற்றுப் படுத்தும் வகை செய்து, அதை எல்லோரும் எளிதாக அறிந்து கொள்ளும்படி அன்னார் சொன்ன அரசியல் சட்டம் எளிமைபடுத்துதல் இன்றும் நாம்
நாம் ஆற்ற வேண்டிய பணிகளில் முதல் பணியாக இருக்கின்றது அவர் தம் ஆன்ம பலமும் அன்பர்களின் மனோ பலமும்,நல்லவர்களின் அறிவுத்திறனும், இளைஞர்களின் எழுச்சியும் தான் இவ்வரிய பணியை உடனே எடுத்துக்கொண்டு செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அடங்காத அரசியல் காளைக்கு எப்போது தான் மூக்கணாங்கயிறு போடுவதோ?(tamming of the shrewd) குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுத்தான் முந்துறும்
என்பதை வாழ்ந்து காட்டிசுற்றம் பேணி ஒண்ணாம் நம்பர் பேச்சாளர், பெட்டியாளராய், கைகூப்பி எல்லா உயிரும் தொழும் புலால் மறுத்த பண்பாளராய், திறமையும் ஆற்றலும் நிறை பணியாற்றிய மாமணி தியாகராசனார் "சிவனை மறவாத நெஞ்சினர் அவரை போற்றிப் புகழாமல் எந்த ஒரு தமிழ்க் குடிமகனும் இருக்கமுடியாது. பல பேரறிஞர்கள் நமக்கு முன் வாழ்வாங்கு வாழ்ந்து பல சாதனைகள் புரிந்து இருக்கிறார்கள். இப்போது காந்தியார் மேல் காவியம் பாடிய பெரும்புலவர் இராமாநுசக்கவிராயர் பற்றி தமிழ் அறிஞர் பெருமக்கள் எடுத்தியம்ப அவர் தம் இணையற்ற பெரும்புலமையை அறிந்து மனமகிழ்ந்தேன். இதுநாள் வரை அறியாம‌ல் இருந்து விட்டோமே என்று அய‌ர்ந்தேன். இவ‌ராஇ இன்னும் த‌மிழ் ம‌க்க‌ளும் த‌மிழ் உல‌க‌மும் ச‌ரியாக‌ அறிந்து கொள்ள‌வில்லை என்று ஆத‌ங்க‌ப் ப‌ட்டேன். இன்று இந்நூலில் அறிஞ‌ர் பெரும‌க்க‌ள் க‌ருமுத்து தியாக‌ராச‌ரைப்ப‌ற்றி எழுதியுள்ளன‌வெல்லாம் ப‌டிக்கும்போது ஒரு பிர‌மிப்பும் ப‌க்தியும் எற்ப‌டுகின்ற‌து. கைக‌ள் தாமாக‌ அனிச்சை செய‌லாக‌ குவிகின்ற‌ன‌. இவ்விரு மேதைக‌ளிட‌மும் ப‌ழ‌கிஎருக்கிறேன். ஆனால் அவ‌ர் த‌ம் முழுப்பெருமையையும் இப்போது தான் என் க‌ண் முன்னே பேருரூ (விஸ்வ‌ரூப‌ம்) எடுக்கின்ற‌ன‌. க‌ருமுத்துத் தியாக‌ராச‌னார் வாழ்க்கையைக் க‌வினுற‌ வெளிக்கொண‌ர்ந்துள்ள‌ க‌விஞ‌ர் ச‌. இள‌முருக‌ன் ந‌ம் ந‌ன்றிக்கும் பாராட்டிற்கும் உரிய‌வ‌ர். அதை பாட‌
நூலாக்கி ந‌ம் இளைஞ‌ர்க‌ளுக்கு பாதை காட்டவேண்டிய‌து உரிய‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை."க‌ருவிலே திருவுடைய‌ க‌ருமுத்து தியாக‌ராச‌ர் பெருவாழ்வு ப‌யின்று பேர‌றிவு பெறுவோம்

No comments:

Post a Comment